இனி பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை!* காகிதமில்லா ஆவணப்பதிவு!! தமிழ்நாடு அரசு அசத்தல் ஏற்பாடு…
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, https://tnreginet.gov.in/portal/ பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள மாதிரி படிவங்களை பயன்படுத்தி புதிய ஆவணங்களை உருவாக்கலாம்.

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனை ஆவணம், உரிமை வைப்பு ஆவணம் உள்ளிட்ட “10” வகை ஆவணங்களுக்கு மட்டும் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே Online மூலம் பதிவு மேற்கொள்ளலாம். அனைத்து வகையான ஆவணங்களையும் இணையவழி உள்ளீடு செய்து ஆதார் எண் சரிபார்ப்பு மூலம் மின்னணு கையொப்பமிட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து காகிதமில்லா ஆவணப்பதிவினை மேற்கொள்ளலாம்.

பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலம் மனு சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய ஓரிரு வினாடிகளில் சான்றளிக்கப்பட்ட நகல் பெற்றிடலாம். சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வராமலேயே இணையதளத்தின் மூலம் மனு சமர்ப்பித்து, கட்டணம் செலுத்தி வில்லங்கச்சான்று பெற்றிடலாம். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே திருமண பதிவுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணைய தளத்தின் மூலம் மின்னணு (QR code scan) முறையில் அரசு கட்டணம் செலுத்தலாம். “TNREGINET” என்ற மேம்படுத்தப்பட்ட கைபேசி செயலி வழியாக பதிவுத்துறையின் பல்வேறு சேவைகளைப் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. “டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பதிவுத்துறை சார்ந்த அனைத்துப் பணிகளையும் நீங்கள் சுயசார்புடனும், முழு நம்பிக்கையுடனும், உரிய அரசு கட்டணத்தை செலுத்தி கையாண்டிட முடியும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பதிவுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Comments are closed.