Rock Fort Times
Online News

தி.மு.க.ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் விஜய் நல்ல முடிவை எடுக்க வேண்டும்… பா.ஜ.க. நிர்வாகி அறிக்கை !

தமிழக பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் தனது லட்சியம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார். இது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும். ஆட்சி, அதிகாரம், யாருக்கு எத்தனை சீட்?, யார் முதல்-அமைச்சர் என்பதை விட, யார் முதல்-அமைச்சராக வரக்கூடாது? என்பதுதான் நம் ஒவ்வொருவரின் சிந்தனையாக இருக்க வேண்டும். தி.மு.க.வை வெற்றி பெற வைக்கும் மறைமுக முயற்சிக்கு விஜய் துணை போக கூடாது. தமிழக மக்களின் நலன் காக்க, தி.மு.க.வை விரட்டக்கூடிய இந்த அரசியல் போர்க்களத்தில் மாபெரும் சரித்திர நாயகனாக விஜய் துணிந்து ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும். மக்கள் நல அரசியல்வாதியாக, வரலாறு போற்றக் கூடிய வகையில் இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும். உங்களுக்கான தகுதியான இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்