Rock Fort Times
Online News

திருச்சியில் முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…* மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்!

முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள் நல அறக்கட்டளை சார்பில் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. சங்க சேர்மன் பாலமுருகதாஸ், தலைவர் பிரசாதராவ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள், குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மருத்துவ வசதி, பென்ஷன், வாழ்வாதார சான்றிதழ் பெறுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறந்த உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சங்க உறுப்பினர்கள் இறந்தால் குடும்பத்தாருக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளையின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக சங்க பொதுச் செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் வரபிரசாத் நன்றி கூறினார். தொடர்ந்து திருச்சியில் உள்ள மண்டல பயிற்சி மையத்திற்கு சென்று தாங்கள் பயிற்சி பெற்ற இடங்களை பார்த்து உறுப்பினர்கள் மகிழ்ந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்