வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம்…* அகில இந்திய குயவர் உரிமை கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம்!
அகில இந்திய குயவர் உரிமை கட்சி மற்றும் அனைத்து குயவர்கள் நல சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு திருச்சி, தென்னூர் உழவர் சந்தை திடலில் பிப்.22ம் தேதி நடைபெற்றது.
கட்சியின் தேசிய தலைவர் சாலை சாதியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சாலை செல்வமணி முன்னிலை வகித் தார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். குயவர் இனத்தில் பிறந்து 56 நாடுகள் ஆண்ட பேரரசர் சாலி வாகனனுக்கு மாவட்டம் வாரியாக சிலை அமைக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சூளை வைக்கும் இடங்களை ஆக்கிர மிப்பு செய்துள்ள நபர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும். வறுமை கோட்டுக்குள் வாழும் குலாலர் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகு திகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்பட 19 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஈரோடு மாவட்ட தலைவர் சூர்யா வடிவேல் வரவேற்றார். முடிவில் முசிறி ஒன்றிய செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Comments are closed.