Rock Fort Times
Online News

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடங்களின் திறப்பு விழா இன்று(பிப்.16) நடைபெற்றது. அந்தவகையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஜாமலை மற்றும் எடமலைப்பட்டிபுதூர் ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். மேலும், கீழப்பஞ்சப்பூர், அந்தோணியார் தெரு, ராஜீவ் காந்தி நகர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பொது சுகாதார வளாகத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் வே. சரவணன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் மதுபாலன், திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துசெல்வம் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்