தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேதி…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9,09,002 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வுகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித் துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான ஆலோசனைகளும், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.