Rock Fort Times
Online News

கிரிக்கெட் மைதானத்திற்குள் ‘விசில்’கொண்டு செல்ல தடை: கண்டக்டர்கள், காவலர்கள் பயன்படுத்தும் விசிலை என்ன செய்யப் போகிறார்கள்..?* ஆதவ் அர்ஜுனா கேள்வி…!

ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விசில் கொண்டு செல்ல நாங்கள் தடை எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது. இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் கண்டக்டர்கள் வைத்திருக்கும் விசிலை என்ன செய்யப் போகிறார்கள். தமிழ்நாடு காவல்துறையினர் பயன்படுத்தும் விசிலை என்ன செய்யப் போகிறார்கள். என்னதான் விசிலுக்கு தடை விதித்தாலும் எங்கள் தொண்டர்கள் கையாலே விசில் அடிப்பாங்க” என்று தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் விசில் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்