சென்னையில் இன்று(09-02-2026) பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக முக்கியத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 65 நாட்கள் தான் இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால் போட்டி கடுமையாக இருக்கும். மூத்த நிர்வாகிகள் தங்களை மட்டும் முதன்மைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாஜகவில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.