Rock Fort Times
Online News

திருச்சி வழியாக செல்லும் 3 ரெயில்களின் சேவை மாற்றம்..!

கரூர் – வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி பாலக்காடு – திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 10, 13-ஆம் தேதிகளில் கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பணிகள் முடிந்த பிறகு அந்த ரெயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16811) இன்று மற்றும் 10, 13-ஆம் தேதிகளில் வீரராக்கியம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை இயக்கப்பட்டு, வீரராக்கியத்திலிருந்து சேலம் வரை இயக்கப்படாது. மேலும், சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16812) இன்று மற்றும் 10, 13-ஆம் தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும். அந்த ரெயில் சேலத்திலிருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும். எனவே, ரெயில் சேவைகளில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்