ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து இன்று(02-01-2026) சமத்துவ நடைப்பயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி, தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். இந்த நடைபயணத்தில் பங்கேற்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த நடைபயணத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.