நடிகை சமந்தா பிரபல இந்தி இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று (01-12-2025) கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே திருமணமான ‘ தி ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் சமந்தா நெருக்கமாக பழகி வருகிறார் என காதல் கிசுகிசுக்கள் கசிந்து வந்த நிலையில், இன்று இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி தேவி சன்னதி முன்பு இன்று காலை சமந்தாவின் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் சமந்தாவே அதிகாரப்பூர்வமாக தனது திருமணத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தான் நடிகை சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். அதே டிசம்பர் மாதமே தற்போது சுபமுகூர்த்த தினமான இன்று ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை 2வதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், நடிகை சமந்தாவும் 2வது திருமணம் செய்து கொண்டது அவரது தனிப்பட்ட விருப்பம். இந்த திருமணம் அவருக்கு நிலைத்து இருக்கட்டும் என ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.