Rock Fort Times
Online News

கரூர் துயர சம்பவம்: நாங்கள் உடனடியாக சென்றதை தவறாக பேசுவது வேதனையாக உள்ளது…!* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(30-09-2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கரூர் சம்பவம் தொடர்பாக அன்புமணிக்கு நேற்றே நான் பதில் கூறிவிட்டேன். உணர்ச்சியற்ற இது போல் சிலர் இருக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்களும் இருக்கின்றோம். கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது இரவு சுமார் 8 மணி அளவில் எனக்கு தகவல் வந்தது. இரவு 10 மணிக்கு நான் கரூர் சென்றேன். நம் கண் முன்னாடியே பிணவறை முன்பு பள்ளி மாணவர்கள் செத்து ஸ்ட்ரக்சரில் தூக்கி வரும் பொழுது எந்த மனிதனாக இருந்தாலும், எந்த தலைவனாக இருந்தாலும் இறப்பின் பொழுது மனவேதனை அடையத்தான் செய்வான். உடைந்து அழத்தான் செய்வான். ‘அன்பு கரங்கள்’
திட்டத்தின் மூலம் படித்து முடித்த மாணவர்கள் அயல் நாட்டிற்கு வேலைக்கு செல்வது வரை கல்வித் துறையில் பல திட்டங்களை கொண்டு வருகிறோம். நீங்கள் எங்களுக்குத் தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறவில்லை, அறிவு சார்ந்த கருத்துக்களை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள். உங்களை நம்பி தான் வீடும், அரசும் உள்ளது. உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் நீங்கள் செல்லுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களது உயிர் மிக முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்