கரூரில், நேற்று முன்தினம் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி ரேங்கிற்கு மேல் உள்ள ஏடிஎஸ்பி ரேங் கொண்ட அதிகாரியை நியமித்து கரூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.