Rock Fort Times
Online News

கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த நிலையில் தனி விமானத்தில் சென்னை சென்றார் விஜய்…!( வீடியோ இணைப்பு)

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று(27-09-2025) தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.அப்போது அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது.கூட்டம் நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கரூரில் இருந்து சாலை மார்க்கமாக நடிகர் விஜய் காரில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரை கேள்வி கேட்கமுயன்ற போது அவர் புறக்கணித்துவிட்டு வேகமாக சென்று விட்டார். அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தனி விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்