Rock Fort Times
Online News

திருச்சி, சிறுகனூர் அருகே தங்க வியாபாரியை மடக்கி 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை..!

சென்னை சவுகார்பேட்டை R. K ஜீவல்லரி மேலாளர் திண்டுக்கல்லில் ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன், 3 பேருடன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். நேற்றிரவு திருச்சி அருகேயுள்ள சமயபுரம் தாண்டி சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்த மர்ம நபர்கள், காரில் இருந்தவர்கள் மீது முகத்தில் மிளகாய் பொடி தூவி காரில் இருந்த 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்