Rock Fort Times
Online News

பிறந்த நாளை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோ…! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பெருமிதம்(வீடியோ இணைப்பு)

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்