Rock Fort Times
Online News

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சி போலீசார் வழக்கு: இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சி ஏர்போர்ட் போலீஸார் தொடர்ந்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் நாளை (செப்.13) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதற்கான இடத்தை பார்வையிட கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளுடன் திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கோவிலில் சாமி கும்பிட்டபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கார்களை நிறுத்தியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஏர்போர்ட் போலீசார் புஸ்ஸி ஆனந்த், குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி விமான நிலைய காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரிகாலன் மீது பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்