Rock Fort Times
Online News

மாணவர் வருகை பதிவினை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை- சிபிஎஸ்இ எச்சரிக்கை…!

மாணவர் வருகைப் பதிவுகளை முறையாகப் பராமரிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று அழைக்கப்படக் கூடிய சிபிஎஸ்இ நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும்
ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும் என்றும், இதனை அனைத்துப் பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் எனக் கருதப்படும் என்றும் அத்தகைய மாணவர்களை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வருகைப் பதிவுகளை முறையாகப் பராமரிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தால் அதுகுறித்த தகவலை பெற்றோருக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்