எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும்…* திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு…!
திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, வட்ட, பாகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாலக்கரை சந்தன மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரகுமான், ரோஜர் ,வாசுதேவன், ஏர்போர்ட் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் கயிலை கோபி வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவொளி சிறப்புரை ஆற்றினார். அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுலஇந்திரா பேசுகையில், நமது பொதுச் செயலாளர் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறது.கூட்டணி பற்றி அவர் பார்த்துக் கொள்வார். நாம் அனைவரும் பூத் கமிட்டி அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இளைஞர்களை அதிகளவு சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாதன், ஜாக்குலின், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி.பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு, ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு சதீஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு வரகனேரி சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வக்கீல் கௌசல்யா, மாணவரணி மார்க்கெட் பிரகாஷ், பாலக்கரை சதர், பேராசிரியர் தமிழரசன், நிர்வாகிகள் இலியாஸ், செபா, ஜெகதீசன் கேபி.ராமநாதன், ஜெயக்குமார், கே.டி. தங்கராஜ், காசிபாளையம் சுரேஷ்குமார், கண்ணன், ராமலிங்கம், அரப்ஷா, நத்தர்ஷா, பொன். அகிலாண்டம், சையது ரபிக், சுந்தரவடிவேல், பாலக்கரை ரவீந்திரன், ஜெகதீசன், ராஜ்மோகன், என்.டி மலையப்பன், செல்லப்பா, எடத்தெரு பாபு, சுரேஷ்குப்தா, காசிபாளையம் சுரேஷ்குமார், அக்பர் அலி , ராஜ்மோகன், கீழக்கரை முஸ்தபா, ரமணிலால், வாழைக்காய் மண்டி சுரேஷ், பூக்கடை முத்துக்குமார், சிங்கமுத்து, செல்லப்பா, செல்லப்பன், டைமன் தாமோதரன், ராஜ்மோகன், தில்லை விஸ்வா, வக்கீல் சேது மாதவன், டைமன் தாமோதரன், சரவணன், ஐ.டி. நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.