Rock Fort Times
Online News

திருச்சி தெப்பக்குளம் பள்ளி அருகே சேலம் வாலிபரிடம் வழிப்பறி ! 2 பேர் கைது!

திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தேவி. இவர்களது உறவினர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (வயது 31 )என்பவர் திருச்சி வந்தார். இவர் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மிரட்டி இவரிடம் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்தனர்.பின்னர் அவரிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை வாங்கி விட்டு செயினை திருப்பிகொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சேரன், சூரிய பிரகாஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்