Rock Fort Times
Online News

கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!

திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் இப்போதில் இருந்தே வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜயும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 120 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தவெகவில் உள்ள 28 அணிகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்தவாரம் தவெக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணி , சட்ட ஆலோசனை அணி மற்றும் வழக்கறிஞர்கள் அணியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்றைய தினம்( ஜூன் 19) மருத்துவர் அணி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகளின் பட்டியலை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், கழகத்தின் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், புதிய பொறுப்பாளர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவர் அணி நிர்வாகிகள் பெயர் விவரம் வருமாறு:-

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்