Rock Fort Times
Online News

திருச்சி வந்த துபாய் தீ விபத்தில் பலியான இருவர் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி!

துபாய் நாட்டில் தீ விபத்தில் பலியான இருவரது உடல்கள் விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தன . கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், குடு (எ) முகமது ரபிக் ஆகியோர் துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது .இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். துபாய் நாட்டில் இருந்து இருவரது உடல்களையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (18.04.2023) இருவரது உடல்களும் வந்து சேர்ந்தன . மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப்குமார் இருவரின் பூத உடல்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்