Rock Fort Times
Online News

மதுரை வந்த விஜயை பார்க்கச் சென்ற போலீஸ்காரர் “சஸ்பெண்ட்”…!

மதுரை மாவட்டம், விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் கதிரவன் மார்க்ஸ். இவர், மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மதுரை வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை பார்க்கச் சென்றுள்ளார். மேலும் அவர், தவெக கட்சித் துண்டு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கதிரவன் மார்க்ஸ் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்