Rock Fort Times
Online News

தமிழ் வழியில் படித்தும் டாக்டராகலாம்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட் !

சென்னை, கிண்டியில் உள்ள மாருதி நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ் வழியில் மருத்துவ கல்வி இல்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்