திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ அடைய வளஞ்சான் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்( வயது 22). குடிப்பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை கமல் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை மேல் ஹரிஹரன் அதிக பாசம் வைத்திருந்ததாக தெரிகிறது. தந்தை இறந்த நாள் முதல் கூடுதலாக மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் வீட்டு உத்திரத்தில் ஹரிஹரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று இருந்த தாய், மகன் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிஹரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.