Rock Fort Times
Online News

லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி:- இளையராஜாவை பாராட்டிய பிரதமர் மோடி…!

முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசை அமைத்தார். அவரது சிம்பொனி இசை நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும் இளையராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல ரஜினிகாந்த் மற்றும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தநிலையில் சிம்பொனி இசையமைத்த இளையராஜாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பு குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி வேலியண்ட் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் தலைவணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்