திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு வழக்கு பதிவானது. இதில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சகாய பெஞ்சமின் (30) போக்சோ வழக்கில் தேடப்பட்டார்.பின்பு இவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி சகாய பெஞ்சமின் என்பவருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.