தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…!
சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று(30-01-2025) நடந்தது. துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி தலைமையில், ஆணையர் வே.சரவணன் முன்னிலையில் உறுதிமொழியை வாசிக்க அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் அதனை திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் நகர பொறியாளர் . சிவபாதம், செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Comments are closed.