Rock Fort Times
Online News

நெல்லையில் சிதலமடைந்த பள்ளிகளில் மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் வார்டு 7ல் மேயர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். காமராஜர் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் பார்வையிட்டு அப்பள்ளியில் சிதிலமடைந்து காணப்பட்ட வகுப்பறையினை அகற்றி விட்டு புதிய வகுப்பறை கட்டுவதற்கும், சமையல் கூடத்தினை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல், மற்றும் உணவின் தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். திருமலை தெருவில் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கழிவுநீர் ஓடையினை பார்வையிட்டு மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் புகாத வண்ணம் தடுப்புசுவர் கட்டி சிறுபாலம் அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மேயர் பி.எம்.சரவணன் அறிவுறுத்தினார். பின்னர் அப்பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் நித்தியபாலையா, சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்