திருச்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 85 வது பிறந்த நாள், மக்கள் சக்தி இயக்கம் நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் 95வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .பொன்மலையடிவாரம் பகுதியில் இன்று காலை நடந்த விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் துணை ஆட்சியர் செல்வமதி சிறப்புரையாற்றி விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னைங்கன்று வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் சதிஸ்குமார், இணை செயலாளர் ஆர்.கே.ராஜா, பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் பாலாஜி, மக்கள் சக்தி இயக்க சார்பில் சுப்ரமணி, தாமு, சுந்தர், சிவகாமி, பவுசிகா தேவி, சரண் கலந்து கொண்டனா் . விழாவிற்க்கு வந்த பொதுமக்கள் தென்னங்கன்றை பெற்றுச் சென்றனா். தென்னங்கன்று வேண்டும் என்பவர்கள் 94433 01713 எண்ணுக்கு தொடர்புக் கொண்டு பெற்று செல்லலாம்.
