Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் கோ சாலை பணிகள்! காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.!

திருச்சி ஸ்ரீரங்கம்  நெல்சன் ரோடு காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள 2.57 ஏக்கர் பரப்பளவில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கோசாலை , மருந்தகம் மற்றும் தீவனம் வைக்கும் அறை கட்டும் பணியினை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   திறந்து வைத்தார். பணி நடைபெற உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையர்   செ. மாரிமுத்து , உதவி செயற்பொறியாளர் அசோகன், இளநிலை பொறியாளர் நந்தகுமார் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர்   ஆண்டாள் இராம்குமார் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினாின்  நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்