Rock Fort Times
Online News

துவாக்குடியில் கடைசி தேர்வு எழுதிவிட்டு கம்பி நீட்டிய பிளஸ் 2 மாணவி?

துவாக்குடி தென்மலை எம்.டி. ரோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ,அண்ணா ஆர்ச் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 3-ம் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து ,தோழிகளிடமும் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடைசி தேர்வை எழுதிவிட்டு மாயமாகி இருக்கின்ற காரணத்தால் காதல் வலையில் சிக்கி அவர் கம்பி நீட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்