Rock Fort Times
Online News

குழாய்களில் மறைத்து கடத்தி வந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்- திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணி…!

கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.  அந்த விமானத்தில்  வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அப்போது பயணி ஒருவர் குழாய்களில் மறைத்து கடத்தி வந்த 180 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றின் இந்திய மதிப்பு 13 லட்சத்து 69 ஆயிரத்து 800 ரூபாய் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்