Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது: முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் பங்கேற்பு…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர்  ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் நாளை (19-11-2024) காலை 10 மணி அளவில் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மஹாலில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர்கள் தங்கமணி எம்.எல்.ஏ., கோகுல இந்திரா ஆகியோர் பங்கேற்று ஆய்வு மேற்கொள்கிறார்கள். எனவே இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்