Rock Fort Times
Online News

அமெரிக்க பயணம் நிறைவு – சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

17 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்காவிலிருந்து சென்னை புறப்பட்டார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈற்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஆகஸ்ட் 29ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார். அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இந்த பயணத்தின் போது அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 17 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவிலிருந்து ஸ்டாலின் இன்று சென்னை புறப்பட்டார். சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோரை அமெரிக்க வாழ் தமிழர்கள் திமுக நிர்வாகிகள் பூங்கூத்து கொடுத்தும் நன்றி மீண்டும் வருக! என்ற போஸ்டர் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியவாறும் வலியனுப்பி வைத்தனர். நாளை காலை 8-9 மணியளவில் முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்