திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது. அந்த சாலைகளை சரி செய்ய வலியுறுத்தியும், மேலும் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலும்; சாக்கடைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.எனவே அந்த வார்டில் தினமும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி திருச்சி பாலக்கரை பாஜக மண்டல் சார்பில் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மண்டல் தலைவர் மல்லி செல்வராஜ், மண்டல் பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் வேளாங்கண்ணி, மண்டல் பார்வையாளர் ஜெயந்தி வெங்கட்ராமன், வார்டு தலைவர்கள் வெங்கடாஜலபதி, குமார், சேவகபெருமாள், செல்வகுமார், உதயகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள்,அணி பிரிவு பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கிளை தலைவர் என கலந்து கொண்டனர்.
