திருச்சி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினா்.
தேர்தல் வாக்குறுதியை வரவேற்கிறோம். அதற்கு மாறாக, வருவாய் துறையில் 10 ஆண்டுகள் பணிமுடித்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.6750 குடும்ப ஓய்வூதியமாக வழங்குவது போன்று வழங்கிட வேண்டுகிறோம். அரசு துறையில் காலி பணியிடங்களில் 50 வீதம் ஒதுக்கீடு செய்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி வழங்கிட வேண்டுகிறோம். சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடமே ஒப்படைக்க வேண்டுகிறோம் என்ற கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திருச்சி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கண்ணில் கருப்பு துணியை கட்டி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில துணை தலைவா் தங்கவேல், மாவட்ட இணை செயலாளா் மணிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவா் சாமிநாதன், மாநில துணை தலைவா் தங்கராசு, மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளா் சந்திரசேகரன் கலந்து கொண்டனா்.
