Rock Fort Times
Online News

ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர் விநாயகன் திடீர் கைது: காரணம் இதுதான்…!

ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த விநாயகன், பாதுகாப்பு படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் கொச்சியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். இந்த விமானம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறங்கியுள்ளது. அப்போது அங்குள்ள பயணிகள் அறையில் அங்கே இருந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் விநாயகன் தகராறு செய்துள்ளார். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரை தாக்கியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து  விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து விநாயகன், “நான் எந்த தவறும் செய்யவில்லை. பாதுகாப்பு படை அதிகாரிகள் தான் என்னை தனி அறைக்கு அழைத்து சென்று, என்னை தாக்கினார்கள்” என்று கூறியுள்ளார்.  கடந்த ஆண்டு, பொது இடத்தில் போதையில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்றும், காவல் நிலைய அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் விநாயகன் கைது செய்யப்பட்டார். பின்னர் பெயிலில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்