Rock Fort Times
Online News

திருச்சி, காட்டுப்புத்தூரில் மது போதைக்கு அடிமையான கணவன் – விரக்தியில் விஷம் குடித்த மனைவி சிகிச்சை பலனின்றி மரணம் !

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள சீலை பிள்ளையார் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். வழக்கம் போல் மது அருந்திய சரவணன் வீடு திரும்பினார். பின்னர் மனைவி தமிழரசி மற்றும் மகன் நவீன் ஆகியோரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழரசி, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்