Rock Fort Times
Online News

முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவு நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…!

அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி 25-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் அன்பில் பொய்யாமொழியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, செந்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலா வேலு ,மூக்கன்,பகுதி செயலாளர்கள் மோகன், கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி.விஜயகுமார் , சிவக்குமார், நீலமேகம், மணிவேல், பாபு, துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்