திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சரளபட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). கோழி வியாபாரியான இவர் மனைவி, மகன், மருமகளுடன் பொய்கைப்பட்டியில் நடந்த நாககன்னிமார் கோவில் திருவிழாவுக்கு நேற்று இரவு சென்று இருந்தார். இன்று(27-08-2024) ரெங்கசாமியின் இளைய மகன் குமரேசன் என்பவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோக்கள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.1.92 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புத்தாநத்தம் போலீசில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.