Rock Fort Times
Online News

திருச்சி வடக்கு தாராநல்லூரில் மின் கசிவால் வீட்டில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் தீயில் எரிந்து நாசம்…!

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வம். ( 62). சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அருகில் வசிப்பவர்கள் செல்வத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில் செல்வம் வீட்டிற்கு விரைந்து வந்தார்.
அப்போது வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ,  7 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என சுமார் ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரிய வந்தது.  இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் செல்வம் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்