Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கசாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம்- நாளை நடக்கிறது…!

திருச்சி கல்லணை ரோடு, திம்மராய சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீரங்கசாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை( 23-08-2024) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9-30 மணிக்குள் நடக்கிறது.  முன்னதாக கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை காலை காவிரியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி
நடைபெற்றது. 21-ம் தேதி புதன்கிழமை  விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம்,  பஞ்சகவ்ய பூஜை,  தன பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் மற்றும் ஹோமங்கள், முதல் கால யாகபூஜை போன்றவை நடைபெற்றன.  22- ம் தேதி வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை,  வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் மாலை மூன்றாம் கால பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.  நாளை 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை நான்காம் கால யாக பூஜைகள், தீபாராதனை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன.  அதனைத்தொடர்ந்து காலை 8-30 மணிக்கு கோபுர கலசத்திற்கு
மஹா கும்பாபிஷேக மும், காலை 9 மணிக்கு மூலஸ்தான அனைத்து தெய்வங்களுக்கும் மஹா அபிஷேகம், திவ்ய அலங்காரம், அர்ச்சனை, ஆசீர்வாதம்,
மஹா மங்ளார்த்தி ஆகியவையும், காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கசாய் பாபா திருவருட்பிரசாதம் வழங்குதலும், தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு “வேம்பமர்ந்த வெண்ணிலா  பாலகன்” எனும்  சாய்பாபாவின் வரலாற்று நூல் ஆலயத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை தேசிய விருது பெற்ற ஆர்.காஷ்யப் மகேஷ் குழுவினரின் சாய் பஜன் நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சீரடிசாய் பவுண்டேஷன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்