திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரது மனைவி ஈஸ்வரராணி(52). பல் டாக்டர். இவரும் திருச்சி மலைக்கோட்டை நாகம்மை நகரைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி ஜெயலட்சுமியும் நட்பாக பழகி வந்தனர். ஜெயலட்சுமி, டாக்டரிடம் கடன் கேட்டார். அவர் தனது பெயரில் வங்கியில் இருந்து கடன் பெற்று கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக ரூ.24 லட்சம் தொகையை ஜெயலட்சுமியின் மகன் தினகரன் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். ஆனால், வாங்கிய கடனை ஜெயலட்சுமி திருப்பி செலுத்தவில்லை. கடன் தொகையை கேட்ட போது ஜெயலட்சுமி, அவரது மகன்கள் தினகரன், அன்பரசன் மற்றும் கார்த்திக் ஆகியோர் டாக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சி நான்காவது ஜூடிசியல் நீதிமன்றத்தில் டாக்டர் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அரியமங்கலம் போலீசார் ஜெயலட்சுமி மற்றும் அவரது மகன்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.