Rock Fort Times
Online News

தஞ்சை அருகே ஆயுதப்படை பெண் காவலர் விபத்தில் பலி…!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சுபபிரியா(23). தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், பேராவூரணி அருகே ரெட்டவயல் கண்ணமுடையார் கோயில் திருவிழா பாதுகாப்பிற்காக சென்றவர், பணி முடிந்து ஓய்விற்காக திருமண மண்டபத்திற்கு பெண் காவலர்களுடன் ரெட்டவயல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் தண்டாயுதபாணி  என்பவர் ஓட்டி  வந்த மோட்டார் சைக்கிள்  சுபபிரியா மீது மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சுபபிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டாயுத பாணியை (42) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விபத்தில், சுபபிரியா உயிரிழந்த சம்பவம் சக போலீசார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்