திருச்சி காந்தி மார்க்கெட்டில் இங்கிலீஷ் காய்கறிகள், நாட்டு காய்கறிகள், பழங்கள், மாங்காய் தேங்காய் என பல்வேறு உணவு பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் வந்து இறங்குகிறது. இங்கிருந்து சில்லறை வியாபாரத்திற்கு தினமும் இரவு பகலாக அனுப்பும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் லாரிகளில் இருந்து ஏற்றி இறக்க சுமார் 2000-க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்து வரும் பொருட்கள் மூட்டைகளாக அனுப்பப்படுகின்றன. மூட்டை என்பது சாதாரணமாக ஒரு தொழிலாளி ஐம்பது முதல் 60 கிலோ எடை கொண்ட மூட்டைகளை தூக்கி சுமக்க முடியும். ஆனால் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வரும் மூட்டைகள் 100 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக வருகிறது. இதனால் ஒவ்வொரு தொழிலாளியும் தினம் தினம் கஷ்ட நிலைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இதனை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரிடம் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.இந்நிகழ்வின் போது மார்க்கெட்டில் பணிபுரியும் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.