திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டை, பாலக்கரை பகுதியில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இதில் பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக மேல சிந்தாமணியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய வெங்கடாசலம் என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல, கோட்டை ஜீவா நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து பெட்டி,பெட்டியாக புகையிலை பொருட்கள், பணம், இருசக்கர வாகனம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed.