Rock Fort Times
Online News

“எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்”- சுரேஷ்கோபி…!

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களில் கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபியும் ஒருவர்.
அவர், மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார். விழா முடிந்ததும் கேரளா சென்ற அவர் இன்று(10-06-2024) செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை. படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால், தற்போது அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியிருந்தேன். ஆனால், கட்சித் தலைமை கூறியதால் பதவியேற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து கட்சித் தலைமை தன்னை விடுவிக்கும் என்று நம்புவதாகவும், எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சுரேஷ் கோபியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்