Rock Fort Times
Online News

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்  சிலைக்கு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, மாநகர செயலாளர் மு.மதிவாணன்  தலைமையில் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்