கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: குற்றவாளிக்கு மரண தண்டனை…!
கடந்த 2016ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் மக்கள் பலரும் நீதி கேட்டு போராடினர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி அமீர்
உல் இஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கேரள கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(20-05-2024) தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி, அமீர் உல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதித்தார்.

Comments are closed.